0
Add to Bookmarks Share
சமீபத்தில் படித்த புத்தகம்ஸ் :

புத்தனாவது சுலபம்-எஸ்.ரா

சில கதைகள் ஏற்கெனவே மற்ற பத்திரிக்கைகளில் படித்தமையால் கொஞ்சன் ஏமாற்றம், இந்த வருட சந்தையில் வாங்கி ஒரே புத்தகம்.

எஸ்ராவை தொடர்ந்து படிப்பவர்கள் ஒரு மேட்டர் கவனிகலாம் , எப்படியும் ஒவ்வொரு தொகுப்பிலும் ஒரு கதை மிக பக்கங்களை ஆக்கிரமத்து,மிக கனத்துடனும் இருக்கிறது.

உதாரணத்திற்கு 18 ஆம் நூற்றாண்டின் மழை தொகுப்பில் ’18 ஆம் நூற்றாண்டின் மழை, புத்தனாவது சுலபம் ல் ‘ஆம் புருனோ குற்றவாளி தான்’ இப்படி.

சமீபத்திய பயணம்: 


சமீபத்தில் டே ரயிலில் தஞ்சாவூர் நண்பனின் திருமணத்திற்காக பயணித்தேன்..தாம்பரத்திலிருந்தே சரியான கூட்டம்,அது திருச்சி ரயிலாலதலால் நிறையவே குன்னக்கோல் மாமாக்களும்,அம்புஜம் மாமிக்களும் குழுமியிருந்தனர் நிலையத்தில்.

ரயிலில் ஏறியவுடன் ஆரம்பித்து விட்டார்கள் கச்சேரியை.சீட்டு விளையாடினார்கள்,மதியம் சிப்ஸ் வைத்து தயிர்,சாம்பார் சாதம் சாப்பிட்டார்கள்.பாட்டுக்கு பாட்டு பாடினார்கள்.எனக்கு சுஜாதாவின் ஸ்ரீ ரங்கத்து தேவதைகள் நியாபகத்திற்கு வந்தது.

திண்ணாவும்,குண்டு ரமணியும் எட்டி பார்த்தார்கள்.தல சுஜாதா யு ஆர் ரியலி க்ரேட்
திருமணத்தில் டைரக்டர் எஸ் ஜே சூர்யாவை பார்க்க நேரிட்டது..41 வயதாம்.மணப்பெணின் உறவினன் போல.டைரக்டராவே இருந்திருந்தால் சில பல ஹிட்ஸ் கொடுத்திருக்கலாம். என்ன செய்ய விதி.

சமீபத்தில் பார்த்த ரசித்த பெண்:

கோழி முட்டைக் கண் நித்யா மேனன் போரடித்ததாலும் ,கடந்த வார விகடனி அஞ்சலியை பார்த்ததில் இருந்தும் இப்போ ‘நிஜமாத்தான் சொல்றியா’.

கண்டிப்பா அந்த ஸ்டில்லை இங்கே போடமாட்டேன் ஹி ஹி :)

சமீபத்தில் பார்த்த ரசித்த படங்கள்:

இரண்டு படங்கள்.

ஒன்று இதில் சைக்கோ பயபுள்ள ஒருத்தன்,கொலகளை வெப்சைட்டில் லைவ்வாக செய்கிறான், ஹிட்ஸ் அதிகமாக அதிகமாக கொலை செய்யும் நேரம் குறைகிறது :) ஐடியா நல்லாயிருக்கில்லா
இதை கண்டுபிடிக்கிறது நம்ம பிகரு எப்பிஐ ஏஜென்ட் Diane Lane.
இதே ஆக்டரசின் இன்னொரு படமும் பார்க்க நேர்ந்தது அது Unfaithfull
செமையான படமிது, வழக்கமான கதை என்றாலும் அவ்வளவு சிறப்பாக எடுக்கப் பட்டிருக்கிறது,
அழகான மகன்,கணவருடன் வசிக்கும் ஹீரோயினை மயக்குகிறான் புத்தக விற்பனையாளனான நம்ம பிராடு இளைஞனன்
அடிக்கடி சந்திக்க இருவரும் தீ பற்றிக் கொள்கிறது, ஆனால் நம்மாளுக்கு மனதில் குற்ற உணர்ச்சியும் இருக்கிறது . ஒரு
கட்டத்தில் புருஷனுக்கு மேட்டர் தெரிய என்ன நடந்தது என்பதை டவுன்லோடு செய்து பார்க்கவும்
இதே தீமில் இன்னொரு படம் ஒன்று முன்பு பார்த்தேன், பெயர் Buttefyly on the wheels. இதில் நம்ம ஜேம்ஸ்பாண்டு pierce brosnan ஹீரோயிசமில்லாம பாதிக்கப்பட்ட ஒரு கணவன் கேரக்ட்ரில்..இதுவும் பார்க்கலாம் ஒரு தபா.

சமீபத்தில் ரசித்த பாடல்:

ரொம்ப நாள் கழித்து மார்க்கண்டேயா பாடலை(நியூ) கேட்க நேர்ந்தது, ரகுமான் ராக்ஸ்..இப்போ திரும்ப திரும்ப கேட்க்கிறேன்.

அதே போல யாவரும் நலம் படத்தில் வரும் காற்றிலே பாடலின் ரீ மிக்ஸ்.இப்படத்தின் இசை ரம்மியமாயிருக்கும் ,இசை?சங்கர் மகா தேவன் நம்ப முடிகிறதா.
இந்த மாதிரி பாடகர்கள்,பல இசையமைப்பாளர்கள் இணைந்து இசையமைத்த பாடல்களில் சில சேகரித்து வைத்திருக்கிறேன்.

உதாரணத்திற்கு

திரு திருடா – பைவ் ஸ்டார் படத்திலிருந்து , இதுக்கு இசை அனுராதா sriram-கணவரும்..எல்லா பாடல்களும் இதில் அருமை..முக்கியமான பைவ் ஸ்டார் பாடல்..இப்பாடலில் இடையில் வரும் சோகம் இழையோடும் இடம் சான்ஸ்லெஸ்

அப்புறமா ‘ஏய் நீ ரொம்ப அழகாயிருக்க’ , இப்படத்திக்கு 5 இசையமப்பாளர்கள், அதில் ரமேஷ் விநாயகமும் ஒருவர், இவர் தான் ‘அழகிய தீயே’ படத்தின் இசையமைப்பாளர்.

இன்னொன்று ஹரிஹரனின் இசையில் ‘பாதிக்காதல் பாதி முத்தம்’, சரியான பாட்டு, வைரமுத்துவின் அட்டகாசாமான வரிகள்..
ஒரு முறை எல்லாவற்றையும் கேட்டு பாருங்கள்

சமீபத்தில் ரசித்த சில போஸ்ட்ஸ்:

ஜோக் எழுத்தாளர்களை பற்றி ஒரு ஜோக் எழுத்தாளரின் கட்டுரை.
தமிழின் பெஸ்ட் கதைகள் படிக்க ஒரு வெப்சைட்.