ஒரு நாள் தனது மனைவியை மருத்துவமனையில் சேர்த்து விட்டு விடுமுறை போடுவதற்காக அலுவலகம் போனார் வைரமுத்து. அங்கு "மனோஜ் கிரியேஷன்ஸ் - பாரதிராஜா படத்திற்கு பாட்டெழுத அட்லாண்டிக் ஓட்டல் , அறை எண் 410க்கு வரவும் "என்ற குறிப்புச் சீட்டு , இவர் மேஜை மீது இவரைப் பார்த்துச் சிரித்துக் கொண்டிருந்தது.
மருத்துவமனையின் நிலைமையைத் தொலைபேசி மூலம் தெரிந்து கொண்டு 'அட்லாண்டிக்கில்'கலக்க இந்த ஓடை , கங்கையின் வேகத்தில் பிரவகித்தது.
அறையில் , இளையராஜா இருந்தார். கங்கை அமரன் இவரை அறிமுகம் செய்து வைத்தார். இருவரும் புன்னகை விளக்கம் செய்து கொள்கின்றனர்.
பாரதிராஜா வந்தார் ."ஓர் இளைஞன் ; இயற்கையின் நேசன்; கலைகளின் காதலன்; கனாக்களில் வாழ்பவன்; சமூகப் பிரக்ஞையும் உடையவன். ஓர் அந்திப் பொழுதில் இயற்கையை நேசித்தும் தன் சுய விலாசம் சொல்லியும், பாட்டொன்று பாடுகிறான் . இது தான் படத்தில் பாட்டு வருகிற சுழல்,"என்றார்.
இளையராஜாவின் ஆர்மோனியம் ஒரு ராஜராகம் பாட ஆயத்தமானது. "தானானே தன்னா தனனன தானானே தனனா". முதல்முறை அவர் வாசித்துக் காட்டிய போதே அந்த மெட்டுக்குள்ளிருக்கும் சுகலயத்தில் இவர் சொக்கிப் போனார். இரண்டாம் முறையும் மூன்றாம் முறையும் பாடிக்காட்டச் சொன்னார். இவரே , பின் பாடிக்கொண்டே எழுத ஆரம்பித்தார்.
"பொன் மாலைப் பொழுது இது ஒரு
பொன் மாலைப்பொழுது
வான்மகள் நாணுகிறாள் வேறு உடை பூணுகிறாள்"
என்று எழுதி விட்டு சரிபார்க்குமாறு கொடுத்தார். இளையராஜா மனதுக்குள்ளேயே பாடிப்பார்த்து புருவங்களை உயர்த்தி, தலையாட்டி , தன் இசைக் குழுவினரைப் பாற்த்து சமிக்ஞை செய்த போது இவரது ஆனந்த வெள்ளம் கரைகடந்தது. பாரதிராஜா கீழே சென்று மேலே வருவதற்குள் சரணங்களை எழுதி முடித்து விட்டார்.
"பூ மரங்கள் சாமரங்கள் வீசாதோ"
"வானம் எனக்கொரு போதி மரம்"
என்ற இடங்களில் மனந்திறந்துபாராட்டினார் பாரதிராஜா. இளையராஜா தனது உதவியாளாரிடம் "வைரமுத்துவின் முகவரியை வாங்கி வைத்துக் கொள்ளப்பா"என்றார். அவர் போனபின் பாரதிராஜா,"இவன் இதுவரைக்கும் எந்த முகவரியையும் வாங்கிவைத்துக்கொள்ளச் சொல்லவில்லை. இன்று முதல் உங்களுக்கு ஒரு புதிய எதிர்காலம் "என்று அன்போடு அணைத்துக் கொண்டார்.
மருத்துவமனைக்கு வந்த போது இவருக்கு ஒரு குழந்தை பிறந்திருக்கிறது . மனைவியார் தாமதம் பற்றி விசாரிக்கிறார். இவரோ , எனக்கு இன்று தான் தலைப்பிரசவம் "என்கிறார். அவர் மனைவிக்கு புரியவில்லை."பாரதிராஜா படத்துக்குப் பாட்டெழுதிவிட்டு வருகிறேன்! பல்லவி உன் பெயரோடு ஆரம்பிக்கிறது "எனக்கூறி சிரித்தார்.
வைரமுத்து ஒரு சினிமாக்கவிஞராக , அவர் மகன் கார்க்கியைப் போலவே அன்றுதான் பிறந்தார்.
வைரமுத்து முதல் பாடல் எழுதிய ஆண்டு 1980 . படம் 'நிழல்கள் '. இவரது பாடல் பதிவான முதல் பாடல் 'சூலம்'. இவர் எழுதி வெளிவந்த முதல் பாடல் இடம்பெற்ற படம் 'காளி'