பன்னிரண்டாம் வகுப்பு படிக்கும் போது ,சுந்தர் ராமன் என்னும் ஒரு நண்பன் தான் சுஜாதாவை அறிமுகப் படுத்தினான்.அப்போது கெமிஸ்ட்ரி புத்தகத்திலும்,பிசிக்ஸ் புத்தகத்திலும் நாங்கள் விகடன்,அல்லது மற்ற கதை புத்தங்களை ஒளித்து வைத்து படிப்போம்.சுந்தர் சுஜாதாவை படிப்பான், நான் அப்போது கத்துக்குட்டி ஆதாலால் ராஜேஸ்குமார் படித்துக் கொண்டிருப்பேன்.
'வசந்த கால குற்றங்கள் ' (இந்த நாவலில் கணேஷ்,வசந்த கிடையாது)தான் நான் முதன் முதலில் படித்த சுஜாதா நாவல் .கோடை விடுமுறையில் ஏனோதானோ என்று தான் அந்த புத்தகத்தை படிக்க ஆரம்பித்தேன்,சுஜாதாவின் சொல்லாடலும்,தமிழை எளிய முறையில் அதே சமயம் வித்தியாசாமாகவும் அவர் பயன்படுத்தியிருந்த விதம் என்னை வெகுவாய் கவர்ந்தது.
முதல் மதிப்பெண் எடுத்தால் வண்டி வண்டியாய் பாத்திரங்களை பரிசாய் கொடுக்கு எங்கள் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பில் முதல் மதிப்பெண் எடுத்ததற்க்கு , முதன் முறையாக புத்தங்கள் கொடுத்தார்கள், அதில் ஒரு புத்தகம் ' ஏன்?எதற்கு?எப்படி?'. அந்த புத்தகத்தின் மூலம் நான் தெரிந்து கொண்டது பல விஷயங்கள் , உதாரணத்திற்கு , அதில் ஒரு வாசகர் கேட்ட கேள்வி , 'மனிதன் இறக்கும் வரை வளர்ந்து கொண்டே இருக்கும் உறுப்பு எது ' அதற்கு பதில் தெரிந்தால் சொல்லுங்கள்.
வசந்த கால குற்றங்களுக்கு பிறகு எனக்கு படிக்க கிடைத்தது 'காந்தளூர் வசந்த குமாரன் கதை' , சரித்திர நாவலாய் இருக்கிறதே போர் அடிக்குமோ என எண்ணி தான் ஆரம்பித்தேன்,ஆனால் வாத்தியார் பிண்ணி எடுத்திருந்தார். அந்த நாவலில் வரும் கணேஷ் பட்டரும்,வசந்த் ஐயரும் தான் கணேஷ்,வசந்த என பிற்காலத்தில் தான் தெரிந்தது.அதற்கு பின் 3 ஆண்டு காலங்கள் கல்லூரியில் சுஜாதாவின் எந்த புத்தகமும் படிக்க கிடைக்க வில்லை.நான்காம் ஆண்டு என் பள்ளி நண்பன் சுந்தரின் பிறந்த நாளுக்காக பரிசாய் கொடுக்க கோவை டவுன் ஹாலில் பழைய புத்தக கடைகளுக்குள் புகுந்து புரட்டிய போது சுஜாதாவின் எந்த புத்தகமும் கிடக்க வில்லை,பொதுவாக அவர் மாத நாவல்கள் எழுதியிராத காரணத்தால் அவர் புத்தங்கள் இந்த மாதிரி பழைய புத்தக கடையில் கிடைக்காது.நம்பிக்கையிழந்த கடைசியாக எதேச்சையாக ஒரு கடையில் பைண்டு பண்ணியிருந்த ஒரு புத்தகத்தை எடுத்து பார்த்தேன்..ஆச்சர்யம் எனக்கு கிடைத்தது..'மூன்று நிமிஷா'. மறுபடியும் புத்தகங்களுக்கு தலை விட்ட போது கிடைத்தது "நைலான் கயிறு" சுஜாதாவின் முதல் நாவல்,குமுதமில் வந்தது.அந்த நாவலுக்கு "சீட்டு கட்டு மாளிகை " என்று இன்னொரு பெயரும் உண்டு. அந்த புத்தங்களை படித்து விட்டே அவனுக்கு பரிசளித்தேன்.
கற்றதும் பெற்றதும் ல் அவர் தனக்கு வரும் மெயில்கள் பற்றி எழுத அவருக்கு இமெயில்கள் அனுப்பினால் அவர் பதில் அளிப்பார் என தெரிய அவருகு என் முதல் மெயிலை அனுப்பினேன். விகடனில் அவர் இரண்டு வரிகளில் கதை எழுதி அனுப்ப சொல்லி எழுதியிருந்தார் ,நான் ஒரு சில கதைகள் யோசித்து அவருகு மெயிலினேன் ,அவரிடமிருந்து மறுநாளே ரிப்ளை வந்தது , ஒரே வரியில் 'too late ' என. ஏமாற்றத்திலும் ஒரு சந்தோசம்.
பின்னர் அவர் பிறந்த நாளுக்கு , இணையத்தில் அவரை பற்றிய பலரும் எழுதிய சிறந்த பதிப்புகள், அவர் கதை பற்றிய தீவிர விவாதங்களை தொகுத்து என் பிளாகில் இட்டேன், அதன் லின்க் கொடுத்து ,அவரை வாழ்த்தி மெயிலினேன். மறு நாள் 'தாங்க்ஸ்' என ஒற்றை வரி பதில் , அவர் என் போஸ்ட்டை படித்தாரா எனத் தெரிய வில்லை.
இன்னொரு முறை முட்டாள் தனமாய் ஒரு ஆர்வத்தில் என் கவிதைகளை அவருக்கு அனுப்பினேன், 'இதை போல இனிமேல் அனுப்பாதீர்கள்' என பதில் அனுப்பினார்.
சினிமாவில் அவரை ஒழுங்காக பயன்படுத்தியவர்கள் மணிரத்னமும், சங்கரும் மட்டுமே, இவர்கள் அல்லாது உள்ளம் கேட்குமே,கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் என சில படங்களுக்கும் வசனம் எழுதியுள்ளார், இந்த படங்களில் எல்லாம் சுஜாதா தான் டயலாக்ஸ் என டைட்டிலில் பார்த்து தான் தெரிந்து கொள்ள வேண்டும்.
விகடன் கற்றதும் பெற்றதுமில் அவர் பல நல்ல கவிஞர்களை,இசையமைப்பாளர்களை,பாடகர்களை,எழுத்தாளர்களை இனம் கண்டு பாராட்டி பேசி அவர்கள் முன்னேற காரணமாயிருந்திருக்கிறார்.உதாரணமாக நா.முத்து குமாரின் 'தூர்' கவிதை மற்றும் 'பூனை' என்னும் கவிதைகளை வெகுவாக பாராட்டினார்.கார்டூனிஸ்ட் சிம்பு தேவனை அவரது சொந்த ஊரிலிருந்து அழைத்து சென்னை வரச் சொல்லி ,பல வாய்ப்புகள் கொடுத்து,இப்போது அவர் டைரக்டராக உயர காரண்கர்த்தா கவிஞர் தாமரை அடையாளம் கண்டவரும் இவரே. இவர் ஒரு காலத்தில் புகழ்ந்தவர்கள் எல்லாம் இப்போது நல்ல நிலையில் உள்ளார்கள்.
இசையமைப்பாளர் ரமேஷ் விநாயகம்('ஏய் நீ ரொம்ப அழகாயிருக்கிற' படத்தில் 5 இசையமைப்பாளர்களில் ஒருவராய் அறிமுகமானார்.) பற்றி அவர் முன்பே எழுதியுள்ளார், 'அழகிய தீயே ' மூலம் நல்ல பயரெடுத்தவ்ர் ரமேஷ் வியாகயம் , அவர் திறமை இன்னும் முழுதும் வெளிப் பட வாய்ப்பு கிடைக்க வில்லை.
இன்போசில் வேலையில் ஜாய்ன் பண்ணி பென்ச்சில் இருந்த மாதங்களில் , கூகுளில் அவரை பற்றியும்,கதைகள், நாவள்கள்,அவர் சம்மந்தபட்ட குழுக்கள்,அவரை பற்றி பதிவு போடுபவர்களிடம் தொடர்பு கொள்வது என ஆரம்பித்தேன்.இப்படித்தான் 'என்.சொக்கன்' அறிமுகமானார்,இவர் சுஜாதாவில் தீவிர வாசகர், விடனில் 'வல்லினம் ,மெல்லினம்,இடையினம்' எழுதினார், இவரிடமும்,கிறுக்கல்.காம் குருவிடமும் நிறைய பேசி , என்னிடம் இருக்கும் நாவல்களை பகிர்ந்தும்,அவர்களிடமிருந்து பெற்றும் இருக்கிறேன்.
to be continued